சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக உள்பட எதிர்க்கட்சியினர் அழைப்பின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், தொழிற்சங்கத்தனர்  என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், நேற்று மாலை தமிழக முதல்வர் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழிசை சவுந்தர ராஜன் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.