சென்னை: பெண் கடன் நுகர்வோர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் 11% பங்களிப்புடன், நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியக் கடன் சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 2019 செப்டம்பர் மாத முடிவில், இந்தியாவில் 3 கோடி பெண்கள் பல்வேறு விதமான கடன்களை வாங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கடன் பெற்றோரின் மொத்த அளவு என்று வருகையில், அதில் பெண்களின் பங்கு 26% என்பதாக அதிகரித்துள்ளது.

இந்த அளவு கடந்த 2013 செப்டம்பரில், 21% என்பதாக இருந்தது. கடந்த 2019இன் மூன்றாம் காலாண்டில், மொத்தம் 62 லட்சம் பெண்கள் கடன் வாங்குவது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 6 மடங்கு அதிகம். மேலும் 63 லட்சம் கடன் கணக்குகள் பெண்களால் துவங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.