தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை: பேட்டியை இடைநிறுத்தி, செய்தியாளர்களை விரட்டிய நிகழ்வு பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

அங்கு இரு தரப்பினரும் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தமிழிசை பேட்டி அளித்தார்.

அப்போது, தேர்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழிசை தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேச மறுத்துவிட்டார்.

செய்தியாளர் அவரிடம் முதல் கேள்வியே ஸ்டெர்லைட் குறித்து பேசியதால், ஆத்திரமடைந்த தமிழிசை, ஸ்டெர்லைட் பிரச்சினை நீதி மன்றத்தில் உள்ளதாக கூறினார். ஆனால், செய்தியாளர் அவரை மடக்கி, சமீபத்தில் பியூஸ் கோயல் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து பேசினாரே என்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதில் அளிக்க மறுத்த தமிழிசை, வேறு கேள்விகள் கேட்கலாமே என அடுத்த கேள்வி எழுப்ப வலியுறுத்தினார்.

நீட் விவகாரம் பற்றி பேசும்போது ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஏன் பேசக்கூடாது? என மீண்டும் செய்தியாளர் கேள்வி எழுப்பி, தமிழிசை கோபமடைந்தார்.  இதையடுத்து செய்தியாளர் 7 பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் மேலும்  கோபமடைந்த தமிழிசை, மைக்கை ஆப் செய்து விட்டு, செய்தியாளரிடம்,  நீங்க நாளைக்கு வாங்கத்தம்பி என எழுந்து சென்றுவிட்டார். செய்தியளார் அவரை வற்புறுத்தியும், அவர் பதில் கூற மறுத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.