மிழ்த்தாய் வாழ்த்து பாடியது தாயுமானவர் என்று தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சிநேகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது யார் என்ற கேள்விக்கு, தாயுமானவர் என பதிலளித்து அதிர்ச்சியூட்டினார் ஜூலி.

தமிழ் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் என்ற அறிமுகத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த இவரே இப்படி தவறாகச் சொல்கிறாரே என்று சமூகவலைதளங்களில் இவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது இந்த கேள்வியைக் கேட்டவர் சிநேகன். ஜூலி பதில் சொன்ன போது சிநேகனும் ஒரு மாதிரி சிரித்து வைத்தார்.

ஆகவே இவருக்கு விடை தெரியும் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

இன்று, சிநேகனிடம் பிக்பாஸ் இதே கேள்வியைக் கேட்டார்.

அதற்கு சிநேகனும், “தாயுமானவர்” என்று பதில் அளித்தார்.

ஜூலி தவறாக சொன்னதைவிட, இன்று சிநேகன் தவறாக சொன்னதுதான் நெட்டிசன்கள் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

“தமிழ்த் திரைப்பாடலாசிரியர், கவிஞர் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார் சிநேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில்கூட சக போட்டியாளர்கள் இவரை கவிஞரே, கவிஞரே  என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்  மனோன்மனியம் பெ.சுந்தரனார் என்பதுகூட இவருக்குத் தெரியவில்லையே..! ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலிருந்து தமிழ்த்தாய் வாழ்த்தும், அதை எழுதியவர் பெயரும் இருக்கிறதே” என்று நெட்டிசன்கள் பலரும் சிநேகனை கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.