சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச் சின்னம் கோரி   நவம்பரில் விண்ணப்பிக்கலாம்  என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் தமிழ்நாட்டில் 58 மாநில கட்சிகள் மற்றும் 6 தேசிய கட்சிகள் என மொத்தம் 64 கட்சிகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என சில கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன.  அதாவது, தேர்தல் ஆணைய த்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ, வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, விசிக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் அந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. மதிமுக, பாமக கட்சிகள் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன.

இந்த நிலையில்,  அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026ல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்பட தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. தற்போது தமிழகத்தின் முதல்வராக, மு. க. ஸ்டாலின் 2021 முதல் ஆட்சியில் உள்ளார். அவரது பதவி காலம் 2026 மே மாதம் முடிவடைய உள்ள நிலையில்,    தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி,  அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், பொதுசின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும், விதிப்படி சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் தேதியுல் இருந்து 6 மாதத்திற்கு முன்பே விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. அதாவது,  2025 நவம்பர் 11ம் தேதி முதல்  அங்கீகரிக்கப்படாத தமிழக அரசியல் கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.