சென்னை: தமிநாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இந்தியா விலேயே அதிக குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தகவல்பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்ட சில வகை குற்றவாளிகளை சிறையில் அடைக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளையடிப்பவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், ஒழுக்கக்கேடான போக்குவரத்துக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசைப் பறிப்பவர்கள் மற்றும் வீடியோ கடற்கொள்ளையர்களின் தமிழ்நாடு ஆபத்தான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1982, குண்டாஸ் சட்டம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆனால் சமீப காலமாக, அரசியல் எதிரிகள், அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது தேவையின்றி குண்டாஸ் பாய்ச்சப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்டிஐ மூலம் பெறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பதிவான குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது. 2015 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் குண்டர்கள் சட்டத்தின் கீழ் 12622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதாவது ஆண்டுக்கு சராசரியாக 2500 வழக்குகள்.
மாநிலத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் தினமும் 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021-ல் பதியப்பட்ட குண்டர் தடுப்பு வழக்குகளில் 51.2% தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது.
பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்ட சில வகை குற்றவாளிகளை சிறையில் அடைக்க சட்டம் அனுமதிக்கிறது, மேலும் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுபவர்களை நசுக்கும் வகையில், அவர்களை கைது செய்வதும், அவர்கள்மீது குண்டர் சட்டம் போடப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. அதன்படி, குண்டர் தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு காவல்துறை தெரிந்தே தவறாக பயன்படுத்துவதாக கண்டித்துடன், தினசரி 10 முதல் 15 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.