சென்னை:  தமிழ்நாட்டில் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பி.டி.எஸ்) அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட கசிவு களால்  ரூ. 1,900 கோடி இழப்பைச் சந்தித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில்,  மே 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசி   ரேஷன் கார்டுகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியில்  அதிச்சிகரமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும்,  ரேசன் அரிசிகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி ஏற்றி இறக்குவதிலும், எலி போன்ற ஐந்துகள்  சாக்கு மூட்டைகளை கடித்து சேதப்படுத்துவதாலும் ஆயிரக்கணக்கான கிலோ அரிசிகள் வீணாகி வருகிறது.  இதன் காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1900 கோடி மதிப்பிலான ரேசன் அரிசி வீணானதாக தமிழ்நாடு அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பி.டி.எஸ்) மக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டதில், ஏற்பட்ட கசிவுகளால் பொது விநியோக முறையில், தமிழ்நாடு அரசு ரூ.1,900 கோடி இழப்பைச் சந்தித்ததாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER)  அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தி இந்து ஆங்கில செய்தித்தாளில் வெளியாகி உள்ள  செய்தியில்,  தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பொதுவிநியோக முறை யில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பல கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக,  ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த குழுவினர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ3,670  நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில்,  தமிழகத்திற்கான மொத்தமுள்ள  5.2 லட்சம் டன் அரிசி யில் 15.8 சதவீதம் கசிவு ஏற்பட்டு சிந்தியதாக கூறப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ஐந்து கிலோ வழங்க வேண்டும். மதிப்பீடுகளைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மாதாந்திர ஆஃப்டேக் தரவு களுடன், வீட்டு உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு 2022-23ன் தரவை ஆய்வு குழுவினர் சீரமைத்துள்ளனர்.

அதன்படி, ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை தரவுகளில் என்.எஃப்.எஸ்.ஏ (NFSA) டைட்-ஓவர், என்.எஃப்.எஸ்.ஏ (NFSA)  அல்லாத மாநில அளவிலான ஒதுக்கீடுகள் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்படுகிறது.

மத்தியஅரசின் விதியின்படி, ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்ற விநியோகித்து வரும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்தி வீணாணன அரிசியின் அளவு மட்டும். சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அதேவேளையில்,  அரிசி கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. றப்பட்டு உள்ளது.

அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு  முறையாக சென்றடையவில்லை. இதனால் சுமார் ரூ69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு,  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,   ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தது, அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் “ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று 2024-25 ஆம் ஆண்டிற்கான சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலால் கடந்த ஆண்டு ரூ.1900 கோடி இழப்பு! அன்புமணி ராமதாஸ்