சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த கொள்கையின் சிறப்பம்சங்கள் விவரம் வெளியாகி உள்ளது.
சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி, அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடன், சமூக நீதி,சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம்அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் மாநில மகளிர் கொள்கை-2024 உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலன், மகளிர்உரிமை துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையைமுதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், துறை ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாலின உணர்திறன் கொண்ட கல்விமுறையை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளர்இளம் பெண்கள், மகளிரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பில் மகளிர் பங்களிப்பைஅதிகரித்தல், பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல், பெண்கள் நிர்வகிக்கும்சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெற டிஜிட்டல் கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைத்தல், பயிற்சி, திறன் மேம்பாடு மூலம் திறன் இடைவெளியை குறைத்தல், மகளிருக்கு வங்கி கடன் உதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவை மாநில மகளிர் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
சமூகநலத் துறை ஒருங்கிணைப்பு துறையாக இருந்து இக்கொள்கையின் செயல்பாட்டை கண்காணிக்கும். இதற்காக, சமூகநலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல், கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும்.
தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலை பெண்கள் உரிமை குழு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, கொள்கை செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்கும். இதேபோல, ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை இதன் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளும் சவால்களை சரிசெய்யும்.
சமூகம், பொருளாதாரம், அரசியலில் அதிகார பகிர்வு பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களின் நிலையை இக்கொள்கை மேம்படுத்தும். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம்நிறைந்த சூழலை உருவாக்கவும் இது ஏதுவாக இருக்கும்.
இந்தியாவில் மகளிர் மேம்பாட்டிற்கென தனியான ஒரு கொள்கைய வெகுசில மாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்:
* பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.
* வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
* வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
* அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.
* பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
* பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
* தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
* நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
* மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியீடு : என்னென்ன சிறப்பம்சங்கள்? – முழு விவரம் இதோ !
* செயல்படுத்துதல் :
அரசில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்பின் மூலம் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த கொள்கையின் நோக்கத்தினை அடைய வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் இணைந்துள்ள பல்வேறு துறைகள், தங்கள் திட்டங்களை கொள்கையின் நோக்கங்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஒருங்கிணைக்கும் துறையாக இக்கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும். சமூக நலத்துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும்.
* கண்காணித்தல் :
தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக் குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும். இதேபோன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளப்படும் சவால்களை சரிசெய்ய வேண்டும்.
இக்கொள்கை, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, இலட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.