சென்னை: தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை மாற்றி அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநில உயர்கல்வி மன்ற தலைவராக, தமிர்நாடு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி மன்ற தலைவராகிறார்.

மேலும், மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவராக, பேராசிரியர் ராமசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.

உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலாளராக பேராசிரியர் கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.