சென்னை: சாதி மோதல்கள், மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் – குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழக வேண்டும் என 3 நாள் மாநாட்டின் இறுதி உரையின்போது  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

“முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் – எல்லாம் என்னால்தான் என்று நினைக்கின்ற அளவிற்கு நான் நிச்சயமாக இருக்க மாட்டேன், இருக்கவும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.

மேலும்,  மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும். மத மோத தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது என்றும்,  சட்டம் ஒழுங்கு சீரான, சாதிமோதல்கள் அற்ற, மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் – குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த – அச்சமில்லா மாநிலமாகத் தமிழ்நாடு திகழ மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,  மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை – வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் நிறைவுநாள் உரையின்போது தெரிவித்தார்.