சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கோட்டையில் அமைந்துள்ள மாநில அரசின் தலைமைச்செயலகம் முற்றிலும் கணினி (டிஜிட்டல்) மயமாக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு ரூ.13 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிடடுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநில அரசுத்துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 13ந்தேதி தமிழகஅரசு தாக்கல் செய்த பட்ஜெட்டும், காகிதம் இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e – Office ) ஆக மாற்றுவதற்கு ரூ.13 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு துறைகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வாரியங்கள் / ஏஜென்சிகளில் இ-அலுவலகத்தை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
அதன்படி,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, டிஎன்இஜிஏ உள்ளிட்டவை ரூ .21,46,24,904 மதிப்பீட்டில் அனைத்து செயலகத் துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்த அரசுக்கு விரிவான முன்மொழிவை அனுப்பியுள்ளது.
இதனையடுத்து,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, TNEGA இன் முன்மொழிவை அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு,நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ. 13,44,27,90 நிதி ஒதுக்கி செயலகத்தின் அனைத்து துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து அரசு உழியர்களுக்கும் Login செய்யும் வசதி, 24 மணி நேரமும் இணைய வசதி, டிஜிட்டல் முறையிலே கோப்புகள் சரிபார்ப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் கையொப்பம், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
கோப்புகளின் தற்போதய நிலையை கண்டறிவதற்கும், அதற்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் 1100 கணினிகள் தலா 60 ஆயிரம் மதிப்பில் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.