சென்னை: தமிழக பதிவுத்துறையில் கடந்த100 நாளில் ரூ.4,988 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  கடந்த 1.04.2022 முதல் 12.07.2022 வரையிலான 3மாதத்தில் 4,988.18 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.  கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில்  ரூ. 2,577.43 கோடி வசூலாக்கி உள்ளது.

தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது பத்திரப்பதிவு துறை. பத்திரப்பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. திமுகஅரசு பதவி ஏற்றதும், பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, பதிவுத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது.

அதன்படி,  2022 ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய் ஈட்டி தமிழ்நாடு பதிவுத்துறை சாதனை படைத்திருக்கிறது.  பதிவுத்துறையில் 2021ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில் உயர்வு கண்டிருக்கிறது. அதன்படி 2021ம் ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான ரூ.2,577.43 கோடியை விட ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க பெற்றிருப்பதாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.