சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் கனமழை காரணமாக  கடந்த ஒரு மாதமாக பள்ளி, கல்லூரிகள் சரியான முறையில் செயல்பட முடியா மலும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து உருவாகி வரும் குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் வளிமண்ட சுழற்றி காரணமாக தொடர்ந்து சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய மழை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள தகவல்கள் இங்கே பதிவிடப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  குமரிக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும்,  இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழையானது, டிசம்பர் 2ந்தேதி வரை தொடரும் என்றும் கூறியுள்ளது.

சென்னையில்,  48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளதுடன்,  நாளை (30ந்தேதி)  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுகிறது. மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்பதால் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள தகவலின்படி,  சென்னையில், அடுத்த நான்கு நாட்களுக்கு  கனமழை பெய்யும் என்றும்,  அதேபோல் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் கேரளாவில் அடுத்த 1-2 நாட்களுக்கு மழை பெய்யும். கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்களுக்கு மழை பெய்யும்.
.
காற்றழுத்த தாழ்வு நிலை நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது, மேலும் வலுவாகவும், சூறாவளியாகவும் இருந்தால் அது மேற்கு-வடமேற்கு பாதையில் ஆந்திராவுக்குச் செல்லும். வலுவிழந்தால் அல்லது வலுவிழந்தால் அது வட தமிழகத்திற்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.