சென்னை: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து உள்ளார்.

டிஜிட்டல் வளர்ச்சி பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது. சமூக வலைதள ஊடக்ங்கள், இணையதளங்கள் சில மக்களிடையே வெறுப்பை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு குற்றச்செயல்களும் நடைபெறுகின்றனர். அதனால், இதுபோன்ற அமைப்புகளை வேரறுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைக்கப்பட்டு உள்ளது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கண்காணிக்க 203 காவல் அதிகாரிகளை உள்ளடக்கிய சமூக ஊடக கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் சைபர்கிரைம் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஊடக குழுக்கள் உருவாக்கபட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு   தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற் காகவும் இந்த குழு பயன்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவைப் பொறுத்தவரை சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.