மதுரை: கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருவதாகவும், முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், அதை தடுக்க கடும் நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமைச்சர்கள் தலைமையில் மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதுடன், அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பபட்டது. இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,
“முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3வது அலையைக் கூட எதிர்கொள்ளவும் தமிழகஅரசு அரசு தயாராகி வருகிறது. வியாபாரிகள், மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு தான் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் பிரச்சாரம் மூலமாக எடுத்துச் சொல்லுங்கள், அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள் என முதல்வர் தெரிவித்துள்ளதை நினைவுபடுத்தியவர், ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரத்தில் மக்களைச் சிரமப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் அரசு தனியாருக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
[youtube-feed feed=1]