தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ்.

தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாகவும் செயலாற்றி வருகிறார்.

1997 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று அரசிதழில் மாற்றியுள்ளதாக நாளேடுகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இனி இவர் டாக்டர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். என்றே அறியப்படுவார் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இவரது கணவ்ரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராஜேஷ் தாஸ் சக காவல்துறை பெண் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சமீபத்தில் நீதிமன்றத்தால் தண்டனைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.