சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் பயணிக்க இருந்தநிலையில் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதித்து, மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]