சென்னை:
ரடங்கை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்க வேண்டும் என்ற விவரங்கள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவோர், பொது இடங்களில் எச்சில் துப்புவோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோருக்கு அபராதம் விதிக்கும் வகையில் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியது.

அதன்படி, பொது சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்களும், வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்களும் காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்களும் அபராதத் தொகையை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மாநில அளவில் இதனை கண்காணிக்க பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.