சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 நாட்கள் முன்னதாக இவிஎம்.ல் வாக்களிக்க அனுமதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தபால் மூலமாக வாக்களிக்க யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள், விமான பணியாளர்கள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.
இந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்கு செல்வதற்கு 3 நாட்கள் முன்னதாவே இவிஎம் இயந்திரத்தில் தங்களது வாக்குகளை செலுத்த அனுமதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக இவிஎம் இயந்திரத்தில் வாக்குகளை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இநத வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.