சென்னை: உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ஆம் கட்ட சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் 6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார்.
8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும்
9-ம் தேதி திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சேலம் கிழக்கு, சேலம் மத்திய பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார்.
மதியம் 1மணிக்கு நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார்.
மாலை 5 மணிக்கு  கரூரில் மக்கள் சந்திப்பு
9ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி திண்டுக்கல்கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு
மதியம் 12மணி மதுரை மாநகர் வடக்கு, தெற்கு பகுதிகளில் மக்கள் சந்திப்பு