சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சர்களிடையே மிக எளிமையாக பழக்கக்கூடியவரும், சுறுப்பானவர் மட்டுமின்றி, உடல்நலத்தில் அக்கறை கொண்டர் மா.சுப்பிரமணியம், திமுகவின் செயல் வீரராக இருந்த மா.சு. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை (சுகாதாரத்துறை) அமைச்சராக பதவி ஏற்ற பிறகு,. மின்னல் வேகத்தில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், மக்களின் அக்கறை செலுத்தி, அதிகாரிகளை விரட்டி வேலை வாங்ககி வருகிறார். பொதுமக்களின் புகார்கள்மீது, காம்ப்ரமைஸ் செய்து கொள்ளளாமல் உடனுக்கு நடவடிக்கை எடுத்து வருவதுடன், தான் ஓடி மற்றவர்களையும் வேகமாக செயல்பட வைப்பவர். அதேசமயம் உடல்நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் நடைபயிற்சி, உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறார். இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து,அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.