சோலி சோரப்ஜி

டில்லி,

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தற்போது அறிவிக்கப்படும் அவசர சட்டம் செல்லாது என்று முன்னாள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெற்றே ஆக வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்து உள்ளது. அதைக்கண்டு மத்தியஅரசு மிரண்டு உள்ளது.

உலகமே வியந்து உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகஅரசு அவசர சட்டம் இயற்றலாம் என தற்போதைய மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தமிழகஅரசு சட்டமுன் வடிவு இயற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. இன்று அந்த சட்ட திருத்தம் தமிழக பொறுப்பு கவர்னரால் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டம் செல்லாது என்று முன்னாள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது போராட்டக்காரர்கள் மட்டுமின்றி தமிழர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.