எஸ்.வி.சேகர் ‘பாஜக’ என்பதால் கைது செய்ய தமிழக அரசு தயக்கம்: டிடிவி தினகரன்

Must read

சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரிகமாக கருத்து பதிவிட்ட,  நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கலாம் என சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அவரை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது. இதற்கு காரணம் எஸ்.வி.சேகர் பாஜகவை சேர்ந்தவர் என்பது தான் காரணம்  டிடிவி தினகரன் கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தா டிடிவி கூறியதாவது,

தமிழ்நாடு அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசால்  திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது என்றும், தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களைப்போல மத்திய அரசு நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பே  நீட் தேர்வு வெளி மாநிலத்தில் நடத்தப்படும் என தகவல் வெளியான போதே  நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன்,  நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க இடம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் இயற்கை வளங்களை அழித்து  நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி சோமாலியாவாக மாற்ற பார்க்கிறது என்று குற்றம் சாட்டினார்.

 

More articles

Latest article