சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முன்வந்தார். அவரை பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள், பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு தாங்கள் பேச அனுமதி வழங்க வேண்டும் என துரைமுருகன் சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், திமுக உறுப்பினர்கள், பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.