அரசு ஊழியர்கள் ரூ.25000 வரை மதிப்புள்ள பரிசுகளை ஏற்கலாம்: தமிழகஅரசு புதிய உத்தரவு

Must read

சென்னை:

மிழ்நாடு அரசு ஊழியர்கள் பெறும் பரிசு தொகையின் உச்ச வரம்பு ரூ.25ஆயிரம் ஆக அதிகரிக்கப் பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் இருந்தது தற்போது ரூ.25ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து,  தமிழக அரசின்  பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களது குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என விதி இருந்தது. அதற்கு மேலான பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டால், அதை லஞ்சமாக கருதலாம்.

இந்த நிலையில், தற்போது ரூ.5ஆயிரம் மதிப்பிலான பரிசு பெருட்கள் பெற முடியும் என்ற வரம்பை, ரூ. 25,000  ஆக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இதன் காரணமாக, இனிமேல் அரசு ஊழியர்கள்,  திருமணங்கள் , பிறந்தாள் விழாக்கள், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளுக்கு, உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பாகளிடத்திலிருந்து ரூ 25,000 வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், பரிசுத்தொகையின் மதிப்பு ரூ .10 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின்  6 மாத ஊதியம் அளவு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இதுகுறித்து, ஒரு மாதத்திற்குள் அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு  பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

More articles

Latest article