சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, சென்னையை அழகுபடுத்தும் விதமாக, ‘சிங்கார சென்னை’ திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், சிங்காரச் சென்னை திட்டத்தின் அடுத்தக்கட்ட பதிப்பாக மேருகூட்டி, ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தை அறிவித்தார். டெல்லி, மும்பை ,கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையை அழகுப்படுத்துவதே தனது கனவு என்று கூறினார். அதையடுத்து, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கப்படும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இதையடுதது, புதுபொலிவுடன் சிங்கார சென்னை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஜூலை 6ந்தேதி தலைமைச்செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, கூவம் மற்றும் அடையாறு ஆறு உள்பட பல்வேறு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது