சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 801 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 17 சரணாலயங்கள் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற சரணாலயங்களாக,  முதுமலை முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகம் மட்டுமின்றி நாடளவில் மிகவும் பிரபலமானது. மேலும்,  தனுஷ்கோடி நீர் பறவை சரணாலயம், மகாபலிபுரம் முதலைப்பண்ணை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு வனவிலங்கு சரணாலயம் , வல்லநாடு காட்டுயிர் பூங்கா போன்றவை புகழ்பெற்றது.

மேலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், திருவள்ளூர் மாவட்ம் புலிக்கட் ஏரி பறவைகள் சரணாலயம், திருப்பூர்  நஞ்சாராயன் குளம் பறவைகள் சரணாலயம், ஈரோடு  வெள்ளோடு பறவைகள் சரணாலயம்,  கோடியக்கரை பறவைகள் சரணாலயம்,  நாகப்பட்டினம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்,, சிவகங்கை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்,இ திருவாரூர் காஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம், இராமநாதபுரம் வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர் பறவைகள் சரணாலயம்,   நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயம்,  முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்,  களக்காடு சிங்கவால் குரங்கு சரணாலயம்,  முண்டந்துறை புலிகள்  சரலாணம்,  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மான்கள் சரணாலயம்,  ஈரோடு சத்தியமங்கலம் புலிகள்  சரணாலயம்,  மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கள் சரணாலயம்,   திருவில்லிப்புதூர் சாம்பல் நிற அணில் சரணாலயம், , விருதுநகர் கி்ண்டி மான்கள் சரணாலயம்,   சென்னை தேசிய பூங்கா,  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  ஆனைமலை இந்திராகாந்தி தேசியப்பூங்கா கோயமுத்தூர் என ஏற்கனவே 17 சரணாயலங்கள் உள்ள நிலையில், தற்போது 18வதாக ஈரோடு மாவட்டத்தில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.