ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய பேப்பர் இல்லை என்று ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் காலதாமதமாவதை தவிர்க்க இணையவழி சேவைகள் தொடங்கப்பட்டது.

இருப்பினும் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று (RC) போன்றவற்றை வாங்க ஆர்.டி.ஓ. அலுவலகம் வரவேண்டிய சூழல் நிலவி வந்தது.

இதை தவிர்க்க இந்திய தபால் துறையுடன் தமிழக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று ஆகியவை வீட்டு முகவரிக்கே தபால் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வுக்கு மட்டும் ஒரே ஒருமுறை ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்தால் போதும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இதன்மூலம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்றும் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச புகார்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.