சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா; உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிறது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும். ஏ.ஐ. பூங்கா மூலம் உயர் தொழில்நுட்ப தரவு மையங்கள் கிடைக்கும். திட்டத்திற்காக பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது; அரசு துறைகளின் எல்லா தரவுகளும் அதில் இருக்கும். சென்னை ஐஐடிக்கு அருகில் தரவு மையத்தை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் பெரும்பகுதி தரவு மையம், ஆராய்ச்சிக்கு செலவழிக்கப்படும். திட்டத்தின் மூலம் உயர் தொழில்நுட்பத் தரவு மையங்கள் கிடைக்கும்.

தமிழ்நாடு முன்னோடி என்பதால் இந்த முதலீட்டின் மூலம் ஏஐ துறையில் மேலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்படும். ஏஐ தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும். நம் ஊரில் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பம்தான் இது என்று கூறினார்.

முன்னதாக,  சர்வம் AI, IndiaAI மிஷனின் கீழ் உள்நாட்டு அடிப்படை மாதிரியை உருவாக்கத்  இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 26ந்தேதி கையெழுத்தானது.  இதைத்தொடர்ந்து, ‘ அனை​வருக்​கும் செயற்கை நுண்​ணறி​வு: உலகளா​விய தாக்​கம்’ குறித்த உச்​சி ​மா​நாடு  இந்தியாவில் 2026 பிப்ரவரியில்  நடை​பெறவுள்​ளது.

இதையொட்டி,  ஜனவரி 8ந்தேதி  நடை பெற்ற இந்​திய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அவதார், பார்த்​ஜென், ஃப்​ராக்​டல், கான்​, ஜென்​லூப், இன்​டெலிஹெல்த், சர்​வம், டெக் மஹிந்​தி​ரா, ஜென்​டீக் உட்பட பல ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களின் சிஇஓ.க்​கள் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன்  மத்​திய மின்​னனு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், இணை​யமைச்​சர் ஜிதின் பிர​சாதா ஆகியோ​ரும் இந்த கூட்​டத்​தில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், செயற்கை நுண்​ணறிவு தொழில்​முனை​வோர் ஆகியோர் நாட்​டின் எதிர்​காலத்தை இணைந்து உரு​வாக்​குபவர்​கள். சமூகத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வ​தில் செயற்கை நுண்​ணறிவு முக்​கிய​மான​தாக உள்​ளது. ஏஐ உச்சி மாநாட்டை இந்​தியா அடுத்த மாதம் நடத்​து​வதன் மூலம், தொழில்​நுட்ப துறை​யில் இந்​தியா முக்​கிய பங்​காற்​றுகிறது. செயற்கை நுண்​ணறிவை மேம்​படுத்தி மாற்​றத்தை கொண்​டுவர இந்​தியா முயற்​சிகள் எடுக்​கிறது. புது​மை​களை கண்​டு​பிடித்து அவற்றை மிகப் பெரியள​வில் அமல்​படுத்​தும் திறன் நம் நாட்​டில் அதி​க​மாக உள்​ளது. உலகுக்கு தனிச்​சிறப்​பான ஏஐ மாடலை இந்​தியா அளிக்க வேண்​டும். உலகுக்​காக இந்​தி​யா​வில் தயாரிப்​பதை அது பிர​திபலிக்க வேண்​டும் என  கூறி​யது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]