சென்னை:

மிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதாலும், கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாலும், சென்னை மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 2 டிஎம்சி அளவுக்கு உயர்ந்துள்ளதால், தீபாவளிக்குள் குடிநீர் விநியோகத்தை உயர்த்த சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது.

சென்னை நகருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 880 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதால், ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்றவிட்டதால், கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டும், குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.

தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக  500 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை
600 மில்லியன் லிட்டராக உயர்த்த சென்னைக் குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் அவ்வப்போது பெய்த மழையாலும் ஏரிகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது இந்த  மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி தற்போது கிருஷ்ணா நிர் உள்பட உபரி நீரினால், சமார் 1,191 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. விரைவில் ஏரிகளின் நீர் இருப்பு 2 டிஎம்சி-யை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘‘பூண்டிக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர், புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 1,000 மில்லியன் கன அடி நீர் வந்துவிட்டால், சென்னையின் தினசரி குடிநீர் விநியோகத்தை  600 மில்லியன் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும்,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் குவாரிகளில்  இருந்து எடுக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.