சென்னை:

மிழகத்தில் பருவமழைத் தொடங்கி உள்ள நிலையில், மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், அதைத் தொடர்ந்து மெட்ராஸ் ஐ நோயும் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

பருவமழை காலங்களில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் வருவது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும், தற்போது  டெங்குவைத்  தற்போது சென்னை உள்பட பல இடங்களில் ஆங்காங்கே ‘மெட்ராஸ் ஐ’ யால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் சிகிச்சைக்கு வருவதாகவும்  எழும்பூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வழியும் திரவத்தால்தான் மற்றவருக்கு இந்த நோய் பரவுகிறது என கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய எழும்பூர் கண் மருத்துவமனை மருத்துவர், மெட்ராஜ் நோய்க்கு தினசரி 10 முதல் 20 நோயாளிகள் வருவதாகவும், அவர்களுக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நோய் பரவாமல் தடுக்க, நோய்  பாதிப்பு உள்ளவர்கள் தனித்தனியே கைக்குட்டைகளும் தனி படுக்கையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மெட்ராஸ் ஐ நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம் என கூறினார்.

அதுபோல,  மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அருகில் இருப்பவர்கள் பார்ப்பதால் நோய் பரவாது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.