சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான  டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இதைத்தொடர்ந்து, அங்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் மறைந்த திமுக தலைவர் மற்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். ரதன்படி,  பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,   கலைஞர் நூலகம், அறிவியல் மையம் கட்டுமானப் பணிகளுக்காகாக பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது .

உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், இணைய வளங்களும் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16-ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]