சென்னை: விருதுநகரில் அமையும் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
தமிழ்நாடு அரசு ரூ.437 கோடியில் விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் கோரி உள்ளது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைக்கப்படும் என்றும்,. இதன் மூலம் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என கூறிய நிலையில், அற்கான பணிகள் நடைபெற்று வருஐகிறது.

விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் மத்தியஅரசின், பிரதமரின் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த ஜவுளி பூங்கா ரூ.1894 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1052 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்தியஅரசின் பி.எம்.மித்ரா என்ற திட்டத்தின்படி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், பிரமாண்டமான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்தியஅரசு கடந்த ஜூலை மாதம் கொடுத்தது.
அதன் தொடர்ச்சியாக விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.437 கோடியில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
