சென்னை: 2022ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘நல் ஆளுமை’ விருதுக்கு தேர்வானவர்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,
திருநெல்வேலியில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்ததற்காக அம்மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது.
செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு,வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் ஆட்சியருக்கு விருது.
நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொண்ட திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது.
திருநங்கைகளின் வாழ்கை மாற்றத்திற்காக முன்முயற்சி எடுத்த செங்கல்பட்டு சமூகநல அலுவலருக்கு விருது.
சிவகங்கையில் நீர்நிலைகளை மீட்ட மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய புவியியல், சுரங்கதுறை இயக்குநராக செயப்படுபவருக்கு விருது.
சென்னை காவல் ஆணையர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.