சென்னை:
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட உள்ள மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை நோக்கி பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் கர்நாடக தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற மலைப்பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் சுடுகாடாகி விடும் என்று கருதி தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மேகதாது சென்று போராட்டம் நடத்தவும், அங்குள்ள விவசாயிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டனர் .பி.ஆர் பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த கர்நாடகாவுக்கு செல்ல முயன்றனர். அவர்களை கர்நாடக தமிழக எல்லையான ஓசூர் அருகே போலீசார் கைது செய்தனர். தமிழக விவசாயிகள் பெங்களூருக்குள் நுழைந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.
இதனால் அங்கு தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிற