சென்னை: மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான  நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புதிதாக  3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய  முடிவு செய்து, டெண்டர் கோர உள்ளது.

வீடுகள் உள்ளிட்ட மின்இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின்இழப்பை தடுக்கவும், மின்கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக மத்தியஅரசு நிதி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றினால், மத்திய அரசு தரும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் செலுத்தத் தேவையில்லை. இல்லையெனில், அது கடனாக மாற்றப்பட்டு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டியநிலை ஏற்படும்.

இதையடுத்தே ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய திமுக அரசு ஆர்வம் காட்டியது. அதன் தொடர்சிசியாக, வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி, 4 தொகுப்புகளாக பிரித்து 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடுக்கப்பட்டது.  இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டாலும், அதானி எனர்ஜி நிறுவனம் மிகக்குறைந்த விலை கோரியிருந்ததால், அந்நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கிடையில், அதானி திடீரென சென்னை வந்து சென்ற விவகாரத்துடன், அதானியுடன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் சந்திப்பு நடத்தியும் விவாதப்பொருளாக மாறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதானியிடம் டெண்டர் கொடுக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து, வேறு வழியில்லாமல், அதானி நிறுவனத்துக்கு கொடுக்க இருந்த  டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம்  ரத்து செய்யப்பட்டது. இதனால் மத்தியஅரசு கொடுக்கும் நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநில அரசுக்கு பெருமை நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்பு உருவானது.  அதாவது தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேவேண்டிய ரூ.39ஆயிரம்கோடி நிதியை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டது.  இந்த நிதி இழப்பை தடுக்கும் வகையில், விரைவில், து, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான விடப்படும் என மின்வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் 128-வது வாரிய கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது,  ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக புதிய டெண்டர்விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?