சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஆட்சிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், #NIRFRankings2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது, தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.
நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் #திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம்!
#நான்முதல்வன், #புதுமைப்பெண், #தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]