சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, தமிழகத்தில் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாகவே தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது என்று மருத்துவநிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த பலருக்கும் தொற்று பரவல் உறுதியாகி வருகிறது. தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக எம்.பி. கனிமொழி உள்பட ஏராளமான தலைவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.