தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!

Must read

 

சென்னை,

மிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூட இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.

தமிழக காங்கிரஸ் தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.  இந்த கூட்டத்தில் டெல்லி மூத்த தலைவர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், முகுல் வாஸ்னிக், சின்னாரெட்டி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

இந்த செயற்குகுழுவில், செயற்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட தலைவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெற இருக்கும் செயற்குழுவில் தமிழக அரசியல் நிலவரம்,  வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி,  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

More articles

Latest article