பெரா வழக்கு: டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்! ஐகோர்ட்டு அதிரடி

Must read

சென்னை,

ன்னிய செலாவணி( பெரா வழக்கு) மோசடி வழக்கில் சசிகலாவின் அக்கா மகனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை விதித்த அபராரதத்தை எதிர்த்து  டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு, தினகரனின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும்  அபராதம் 28 கோடியை செலுத்தவும் உத்தரவிட்டது.

அதிமுக. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி. தினகரன். இவரது வங்கி கணக்குக்கு கடந்த 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை “டெபாசிட்’ ஆனது.

இதையடுத்து, இவர் மீது 1996-ம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து, அவரிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. பின்னர், அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் டிடிவி. தினகரன் மேல்முறையீடு செய்தார்.

இதை விசாரித்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள், ரூ.25 கோடி அபராதத் தொகை நிர்ணயித்தது சரிதான் என்று முடிவு செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு  இன்று பிற்பகல்  தீர்ப்பு வழங்கியது.

டிடிவி தினகரனின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மேலும் ரூ.28 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

இதன் காரணமாக சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article