சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 17-வது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் காலை 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இதில், சமீபத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் c;sgl புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. . தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கூட்டத்தில், தொழில் துறை உட்பட சில முக்கியத் துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]