சென்னை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ஐஎன்டிஐஏ எனப்படும் இந்தியா கூட்டணி கூட்டம் முப்பையில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், தங்களது அணிக்கு இந்தியா அதாவது, ஐஎன்டிஐஏ (I.N.D.I.A) என பெயர் வைத்துள்ளது. இந்த கூட்டணி கட்சிகளின் இரு ஆலோசனை கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3வது ஆலோசனை கூட்டம் முப்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை தொடங்கும் கூட்டத்திலும், நாளை நடைபெற உள்ள ஆலோசனையில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதைத்தொடர்ந்து நாளை இரவு தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முப்பையில் இன்று மாலை கூடும் இந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகளை சேர்ந்த 80 தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 2 கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு தாவவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் கூட்டணி கட்சிகளில் பங்கேற்றுள்ள பல மாநில கட்சிகளின் பல்வேறு தங்களது மாநிலங்களுக்கு ஏற்றவாறு, கொள்கைகளை உருவாக்குவது, கூட்டணிக்கு யார் தலைமை என்பதும், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதைத்தொடர்ந்து, மேலும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்று உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால், இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவி வேண்டாம் என தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளத.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.