சென்னை:

மிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தற்போது மனநல நோய்களும் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மனநோய் பாதிக்கப்பட்டவர்களும், காப்பீடு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தின்படி,  ரூ. 1 இலட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை நான்காண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள், குறிப்பிட்டுள்ள நோய் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள், இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

இநத் காபீடு திட்டத்தை பெற்றுள்ளவர்கள், அரசு மற்றும்  தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும்.

இந்த திட்டத்தின்படி, ஏற்கனவே  பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முதல், 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக் கும், 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தில் தற்போது, மனநோய் சேர்க்கப்பட்டுள்ளது.  அதனப்டி,  மனச்சிதைவு நோய், பை போலார் (Bipolar) என்றழைக்கப் படும் இரு துருவ மனநோய், போதை பொருட்களால் ஏற்படும் மனநோய், மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள், உடல்நல பாதிப்பு களால் ஏற்படும் மனநோய், மன வளர்ச்சி குறைபாடு உள்ள வர்களுக்கு ஏற்படும் மனசிதைவுக் கான அறிகுறி நோய்கள் உள்ளிட்ட 6 மனநோய்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.