சென்னை: ரிமோட் வோட்டிங் மெஷின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதிஉ ள்ளார். அவரது கடிதத்தில்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ஆர்விஎம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியான இந்த இயந்திரம், பல தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜன. 16-ம் தேதி ஆர்விஎம் இயந்திர செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தில் உள்ளன என்பது இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை  அகில இந்திய தேர்தல் ஆணையத்தில்  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.  இதுமட்டுமின்றி, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கவும், அதிமுக கட்சி என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு  கடிதம் எழுதி உள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படுகிறது. அதுபோல மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என கூறியுள்ளது.

ஆனால், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பணி தொடர்வதாக கூறி வருகிறார். அதைத் தொடர்ந்தே சட்டப்பேரவையில் இபிஎஸ் ஓபிஎஸ் அருகருகே அமரவைத்து சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழகஅரசின் நடவடிக்கைக்கு துணைபோகும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,  சத்திய பிரதா சாகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும் குறிப்பிட்டு  கடிதம் எழுதி உள்ளார்.

ஒரேநாடு ஒரேதேர்தல்: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம்!

2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்: காங்கிரஸ், விசிக எதிர்ப்பு…