சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டம் புத்தாண்டின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர் விரைவில் நடைபெற உள்ளது.  மேலும் நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.