பாஜக கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக-வில் இணைந்துள்ளார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த காயத்ரி ரகுராம் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்க அறுகதையோ தகுதியோ இல்லாதவர் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

மேலும், அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனை அடுத்து பாஜக-வில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் ஓராண்டுக்குப் பிறகு தற்போது அதிமுக-வில் இணைந்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதிமுக-வை பலப்படுத்துவதில் அவர் தீவிரமாக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.