சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. அன்றைய தினம் கவர்னர் உரை ஆற்ற உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கவர்னர் பேரவையில் வாசிப்பார். இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக சட்டசபையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜன. 6 -ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்றும் வரும் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
[youtube-feed feed=1]