முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்!

Must read

சென்னை: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நாளை காலை பதவி ஏற்றதும், நாளை மாலை 4 மணி அளவில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக நாளை காலை 9 மணிக்கு திமுக தலைவல்  மு.க.ஸ்டாலின் உடன் மேலும் 33 பேர் தமிழக அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. அதைத்தொடர்ந்து, மெரினா சென்று அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மரியாதைசெய்யும் ஸ்டாலின் பின்னர் தலைமைச்செயலகம் செல்கிறார். அங்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்கின்றனர்.

அதன்பிறகு , புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுடன், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  நாளை மாலை 4 மணிக்கு  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் புதிதாக பதவியேற்கும் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் உள்பட நாளை பதவி ஏற்கும் 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியல் – முழு விவரம்!

More articles

Latest article