சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக இன்றும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அன்று பொதுநிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19ந்தேதி வேளாண் நிதிநிதி அறிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதையடுத்த ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை மீண்டும் 21ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 3வது நாளாக நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது.
இறுதிநாள் அமர்வான நாளை ன்பண மானியக் கோரிக்கைகள் , இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அறிவித்தல் , துணை மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தலும் , ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.