2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: ஓபிஎஸ் தாக்கல்….

Must read

சென்னை:

மிழக பட்ஜெட் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நிதி அமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் தாக்கல்  செய்து வருகிறார்.

பட்ஜெட் வாசிக்க தொடங்கும்போது, முதலில் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். அலைவீசும் கடலோரம் துயில் கொண்டு இலைவீசும் இயக்கத்தை வாழ்த்தி வழி நடத்திக் கொண்டிருக்கும் தெய்வம் ஜெயலலிதா,  மும்முறை செங்கோலை தன்னிடம் வழங்கிய குலதெய்வம் எனவும் ஜெயலலிதா அதிமுக நல்லாட்சியின் காவல்தெய்வம் என்றும் ஜெயலலிதா, எனது குல தெய்வம் ஜெயலலிதா என்றும் உருக்கத்துடன் புகழாரம் சூட்டி பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலைல் உரையுடன் தொடங்கி 8ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு வாரம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சட்டப்பேரவையில்  துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். ஓபிஎஸ் சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட். பட்ஜெட் உரையை முடித்தபிறகு, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

More articles

Latest article